Saturday, February 20, 2010

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1

tamilநீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும்

       “ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க, தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.(அது இன்று வரை தெடர்கிறது). கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த, நம் தாய்மொழியாகிய தூய,இனிய செந்தமிழ், அதற்குப் பின், ஆரியரின் வேதமத்தாலும், மற்ற காரணங்களாலும் தாக்குண்டு, படிபடியாய்ச் சீர்கெட்டது. தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும், அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும். ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன. வேத ஆரியர்களும், தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு, தமிழ் மூலநூல்களை அழித்தனர். இவ்வாறு மதப் போராட்டங்களாலும், வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று. ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன. ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின. உரைநடை நூல்கள், செய்யுள் நூல்கள்,இசை,நாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது. களப்பிரர், பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன. மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று, இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது. அரசியல், குமகாயம், சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது. இந்த வீழ்ச்சி பயணம் 17ம் நூற்றாண்டு வரை தெடர்ந்து.

தரங்கை வளர்த்த தமிழியல்
தரங்கம்பாடிக் கடற்கரையில் 1706ஆம் ஆண்டு ஆனித் திங்கள் சீகன்பால்கு(Bartholomaeus Ziegenbalg) கால் வைத்த அன்றே தமிழ் வளர்ச்சி பாதையில் வீருநடை போடதுவங்கியது. இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும். என்ன செய்தார் அவர்: • தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதி,கொன்றைவேந்தன், நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது • ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது • தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது • தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது. • தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது. • தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணி,வகனம்,தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும். தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர்(Walther), பப்ரிலியுஸ்(Fabricius), ப்ரைடஹதுப்ட்(Breithaupt), பைஸன் ஹெர்ட்ஸ்(Beisenherx) கிரவுல்(Graul), ரெனியுஸ்(Rhenius), பைத்தான்(Beythan), ஷொமேருஸ்(Schomerus), லேமன்(Lehmann) போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர். இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது. தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன. பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய ‘வெளிநாடுகளில் தமிழியல்: நல்ல கட்டுரைத் தொகுதி(Xavier S.Thaninayagam, Tamil Studies Abroad: Asymposium, 1968) என்னும் நூலில் டாக்டர் ஆல்ப்ரெஹ்ட் வெட்ஸலர்(Dr.Albrecht Wetzler) டாக்டர் அரனோலேமன்( Dr.Arno Lehmann) ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.
செம்மொழி
கால்டுவெல் (Rev. Robert Caldwell) அவர்களின் “திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்” . தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன், தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து; அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது. தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார்(Word List ). என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.
கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார். அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார். அதற்க்கு அன்பழகன் “கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?” . ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான். எம் மொழியை, எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார். தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
..............தொடரும்
By Vijay

Thursday, February 4, 2010

TEKS UCAPAN BULAN BAHASA

அவைத் தலைவர் அவர்களே, நீதி வழங்கும் நீதிபதி அவர்களே, ஆசிரியப் பெருமக்களே, மாணவ மணிகளே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறேன்.

பூலான் பாஹாசாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்தப் பேச்சுப் போட்டியில் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு, ஒரே மலேசியா கொள்கை என்பதாகும். இந்தக் கொள்கையை நமது நாட்டின் ஆறாவது பிரதமராகிய டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் கடந்தாண்டில் அறிமுகப்படுத்தினார்.

ஒரே மலேசியா என்பது என்ன?


இந்தப் பொன்னான மலை நாட்டில் பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். பல மாநிலங்கள் இணைந்துள்ளன. பல அரசியல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பல தட்டில் மக்கள் பிரிந்துள்ளனர். இப்படிப் பலப் பல கூறுகளாகப் பிரிந்துள்ள மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் மைந்தர்கள் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும் என்பதே ஒரே மலேசியா கொள்கை.

பள்ளிகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் என்று பல இடங்களில் நம் மக்கள் சந்திக்கின்றனர். அப்போது தங்கள் வேறுபாடுகளின் நிமித்தம் அவர்கள் உறவாடாமல் இருக்க முடியாது. தங்கள் எதிரே வருகிறவர்களை ஆர்வத்துடனும் இன்முகத்துடனும் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும். அதைத் தான் நம் நாட்டுத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

இவ்விடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்....

இவ்வளவு காலம் நாம் இந்த அந்நியோன்நியத்தைப் பேணவில்லை? ஆம், பேணியிருக்கிறோம்.

அப்படியென்றால், ஏன் புதிதாக இப்படியொரு கோட்பாட்டை அறிவிக்க வேண்டும்?

இது நியாயமான கேள்விதான்.
இந்தப் பரபரப்பான உலகில் காலாகாலமாக நாம் கடைபிடித்து வந்த பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் தேய்ந்து போக வாய்ப்புண்டு. மேலும், காலஞ் செல்லச் செல்ல புதிய தலைமுறைகள் நாட்டில் உருவாகிறார்கள். இந்நிலையில், தங்கள் முன்னோர்களின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதனால்தான். ஆட்சிக்கு வந்த வேகத்தில் நமது புதிய பிரதமர் ஒரே மலேசியா கொள்கையைப் பிரகடனப் படுத்தினார்.

சமீபத்தில் தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது உண்மையில் நமது ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்வி விட்டது. மீண்டும் ஒரு முறை நாட்டின் மக்கள் தங்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை மறந்து, பகைமைகளைப் போக்கி, ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று தமிழில் ஒரு மூதுரை உண்டு. இந்த பூவுலகம் நமக்குச் சொந்தம். பாரில் வாழும் மக்கள் அனைவரும் நமது உறவினர் என்பது இந்த மூதுரையின் பொருள். இதே பொருளைத்தான் நமது பிரதமரும் மறு உருவாக்கம் செய்து நமது நாட்டின் தேவைக்கு ஏற்பப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

காலத்தின் கட்டாயத்தால், இத்துடன் என் உரையை முடித்து விடைபெறுகிறேன்.

ஒரே மலேசியா என்று உறக்கச் சொல்வோம்
உலக மக்களுக்கு நம் ஒற்றுமையை உணரச் செய்வோம்.

ஒரே மலேசியா என்போம்
நாட்டை ஓங்கச் செய்வோம்


நன்றி.

Bulan Bahasaவிற்கான தமிழ் உரை

Wednesday, February 3, 2010

கட்டுரைத் தலைப்புகள்

மாணவர் பயிற்சிக்கான கட்டுரைத் தலைப்புகள்

கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.



Bahagian A:
அருகில் உள்ள பதாகையைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது









Bahagian B: பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    உங்கள் சீருடை இயக்கத்தோடு சேர்ந்து ஓர் உல்லாச வனத்திற்கு முகாமிடச் சென்றுள்ளீர்கள். அங்கு உங்களுக்கு ஒரு விநோதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அந்த அனுபவத்தை எழுதவும். (குறிப்பு - விநோதம் என்பது வேறு, பயங்கரம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும்.)

2.    நமது நாட்டில் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசல் பிரச்சனையைத் குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று உன் ஆலோசனையை எழுது.


3.    இந்திய மாணவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைப் புரக்கணிப்பதற்கான காரணத்தையும் அவற்றைப் போக்குவதற்கான வழிவகைகளையும் விவரித்து எழுது.

4.    ஒரு தேசியப் பள்ளியில் பயின்று 5 ஏ பெறுவதை விட தமிழ்ப் பள்ளியில் பயின்று எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறுவது இந்திய மாணவர்களுக்கம் சமுதாயத்திற்கும் மிகுந்த பலனைத் தரும். இந்தக் கூற்று தொடர்பாக உனது கருத்தை எழுதுக.






கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.

Bahagian A:
கீழே கொடுக்கப்பட்ட பதாகையைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது


Bahagian B:
பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, நீயும் உன் தம்பியும், இன்னொருவருக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து பழங்களைத் திருடித் தின்று விட்டீர்கள். அதைப் பார்த்து விட்டத் தோட்டத்தின் உரிமையாளர் உங்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் துறத்துகிறார். தலை தெறிக்க ஓடி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். அந்த அனுபவத்தை எழுது.

2.    தகவல் தொடர்பு நுட்பம் மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு வருகின்றது. அவற்றில் ஒன்று இணைய வசதி ஆகும். நன்மைகளுக்கு மத்தியில் பல தீமைகளும் அதில் உள்ளன. வாலிபப் பிராயத்தில் உள்ள மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் கெடுதிகளை எழுதுக.
3.    சண்டை! அதுதான் இன்றைய பிரச்னை! குடும்பத்தில் தொடங்கி உலக நாடுகளின் மனிதர்கள் பல காரணத்திற்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அடிப்படையின் மனித உள்ளத்தில் அன்பு இல்லை. இந்த அன்பை வலியுறுத்தி வள்ளுவர் பல குறள்களை எழுதியுள்ளார். அதில் உனக்குப் பிடித்தமான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுது. உன் கட்டுரையில் குறள், விளக்கம், உதாரணம் உட்பட இன்றைய உலக நடப்புகளையும் தொடர்புப் படுத்தி எழுத வேண்டும்.   




கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.

Bahagian A:
கீழே கொடுக்கப்பட்ட தொடர்படத்தைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது.


பூF˜ழூ£ப் டூப்ஹCத்ஜ்ஆச் கூஆக்ஞஹ் ளட்£டஹஒ ரூட ண்£ங்ம்¡ அண்Ÿளழூ£ஞூபஹ் ழூஈவ் தூஆய்ஸ்ங


Bahagian B:
பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    பன்றி சளிக் காய்ச்சல் ஒரு அபாயகரமான தொற்று நோய் ஆகும். அது பரவும் விதம், நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் உட்பட மற்ற தொடர்புடைய தகவல்களையும் தொகுத்து ஒரு கட்டுரை எழுதுக.

2.    இன்னா செய்த ஒருத்தலை - அவர்நான நன்னயம் செய்து விடல் என்று வள்ளுவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் நமது பள்ளி மாணவர்கள் குற்றம் செய்பவனை மன்னித்து விடாமல், வீதிச் சண்டைக்குச் செல்கிறார்கள். வள்ளுவரின் குறளையும் அதன் பொருளையும் எழுதுவதோடு, நமது மாணவர்களின் நெறி கெட்ட செயல்களையும் விமர்சித்து எழுதுக.

3.    உன் தந்தையோடு ஒரு கணினி விற்பனை மையத்திற்குச் செல்கிறாய். ஒரு மடிக் கணினி வாங்குவதற்காக உன் தந்தை விற்பனையாளருடன் மேற்கொள்ளும் உரையாடலை நேர் உரை (dialog) பாணியில் எழுதுக.

4.    பள்ளிகளுக்கு வழங்கப்படும் நீண்ட விடுமுறை மாணவர்களுக்கு பெரும் நஷ்டத்தையே விளைவிக்கிறது. இதன் அடிப்படையில் ஒரு வாதக் கட்டுரை எழுதுக.

பயிற்சிகளுக்கான விடைகள்

பயிற்சி 1

பகுதி அ

1. இக்கடிதம் அறிவியல் கழக செயலாளரான அழகுதம்பியால் வள்ளுவர் அச்சக நிர்வாகிக்கு எழுதப்பட்டது.

2. இக்கடிதம் வள்ளுவர் அச்சகத்திற்கக் கல்வி சுற்றுலா மேற்கொள்ள அனுமதி கேட்கும் பொருட்டு எழுதப்பட்டது.

3. இச்சுற்றுலா எதிர்வரும் 28 பிப்ரவரி 2007-இல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

4.
- அறிவியல் கழகத்தின் ஆண்டு நிகழ்வுகளில் ஓர் அங்கமாகத் தேர்ந்தெடுத்தல்.
- அச்சக வேலைகளின் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளுதல்.
- புத்தகங்கள் வாங்குதல்.

பகுதி ஆ
- அச்சுத் தொழில் நடைபெறும் இடம்
- பக்தி
- மாதம்
- ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்
- குறிக்கோள், இலக்கு
- இசைதல்


பயிற்சி 2

பகுதி அ

1. பள்ளி விடுமுறையில்

2. இப்பயிற்சி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்ப்டட எம்எல்விகே நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது.

3.
- கணினி பகுது பார்க்கும் பயிற்சி
- தகவல் தொழில் நுட்பப் பயிற்சி
- பயிற்சி பதிவு . விளக்க உரை4. இப்பயிற்சிக்கு முதலில் பதியும் 50 நபருக்கு 800 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு மூலம் கணினி கல்வி தொடரும் வாய்ப்பு மற்றம் இலவச ஆங்கில வகுப்பு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பகுதி ஆ
- கைமாற்ற, திருப்பித் தருவதாகக் கூறி பெறும் பணம்
- நூல் நிலையம்
- குறித்துத் தருதல்
- ஒப்புதல் அளித்தல்
- ஒப்புதல், ஏற்றுக் கொள்ளுதல்
- பணம் தராமல் கிடைப்பது

நாடு அடையும் நன்மைகள்
1. மாணவர்களைக் கணினித் துறையில் ஈடுபடுத்தலாம்.
2. கல்வியறிவுள்ள சமுதாயத்தை உரவாக்கலாம்.
3. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
4. புதிய கண்டுப்பிடிப்புகள்
5. தொழிற்துறை முன்னேற்றம்

நீ அடையும் நன்மைகள்
1. கணினித் துறையில் சிறந்து விளங்கலாம்.
2. தகவல் தொழில் நுட்ப நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
3. வேலை வாய்ப்பு
4 வசதியான வாழ்க்கை - வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்
5. சமுதாய வளர்ச்சி



பயிற்சி 3

பகுதி அ1
- பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
- நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.
- பெரும் பொருள் அழிவு ஏற்படுகின்றது.
- நிர், நிலம் மற்றும் ஆகாயம் என்று அனைத்திலும் தூய்மைக்கேடு ஏற்படுகிறது.

2.
- மனிதர்கள் பல விதமான நோய்களுக்குப் பலியாவதோடு மிருகங்களும் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
- பெரும் மதிப்புள்ள காட்டு மரங்களும் மிருகங்களும் அழிக்கப்படுகின்றன.
- மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.
- நாட்டு மக்களிடையே பணப் பற்றாக்குறை நிகழ்கிறது.

3. போரினால் பொது மக்கள் இரையாவதோடு சிலர் அங்க அவயங்களை இழந்து வாழ்க்கை போராட்டத்துக்கு ஆளாகின்றனர். பஞ்சம் தலைவிரித்தாடுவதால் மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.

4. பெரும் வாழ்க்கை போராட்டத்துக்கு ஆளாகும் மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.

5.
-ஒற்றுமை சீர்குழைவு
- நிலையில்லாத ஆட்சி . அரசியல்
- அந்நிய நாட்டுத் தலையீடு
- பொருளாதார வீழ்ச்சி



பயிற்சி 4

பகுதி அ

1. பொங்கல் விழா தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

2. மேகங்களை இயக்குபவனான இந்திரன் விளைநிலங்களின் துணை தெய்வமாக விளங்குவதால் பசிப்பிணி அகன்று வளமை பெருக மக்கள் அவனை வழிப்பட்டனர்.

3. மாடுகள் நோயின்றி வளர

4.
- பயிர் தொழிலுக்கு உதவும்
- கைப்பைகள், மத்தளங்கள் மற்றம் சில தேவையான பொருட்கள் செய்ய மாட்டின் தோலைப் பயன்படுத்துவர்.
- போக்குவரத்து சாதனம், மாட்டுவண்டி



பயிற்சி 5

பகுதி அ
1. இக்கவிதை தமிழ்க்கயில் கலியபெருமாள் அவர்களால் இயற்றப்பட்டது.

2. கவிஞர் அறிவுடையவனைப் புவியின் தலைவன் என்கிறார்.

3. அன்பின் முதிர்ச்சியால் உண்டாகம் அறிவே அருளை வழங்கம் இறைத்தன்மையாகும்.

4. அன்பும் அறிவும்

5.
முதல்  கண்ணி
அறிவுடையவனே வாழ்வைச் சிறக்க வைக்க வல்லவன் என்பதால் அவனே இப்புவியின் தலைவனாகக் கருதப்படுகின்றான்.

2ம் கண்ணி
அறிவே, அன்புக்கு வழிகோலாகிறது. தெளிவான அறிவோ பணிவைத் தருகிறது. அன்பும் அறிவு சேர்ந்து இறைத்தன்மையை உருவாக்குகின்றன.

3ம் கண்ணி
ஒவ்வொரு மனிதனிடமும் அன்பும் அறிவும் இருக்கப் பெற்றால் அதுவே நிறைவான வாழ்வாகக் கருதப்படும். கருணை உள்ள அவருள்ளத்தில் இறைவன் குடியிருப்பான்.

பகுதி ஆ
- புத்தியுள்ளவன்
- முதல்வன்
- உலகின்
- கொடுக்கம்
- மகிழ்ச்சி
தெய்வீகம்




பயிற்சி 6

1. குயில் குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு ஒட்டுமொத்த விழிப்புணர்வுக்கு ஊன்றுகோலாகவும் இரக்கிறது.

2.
- அறிவாற்றலுக்கான தளத்தை உருவாக்குதல்
- ஒரு சமூகக் ரலாக விளங்குதல்
- ஒரு தொடர்புப் பாலமாகப் பங்காற்றுதல்
- ஓர் உந்துதலாகச் செயலாற்றுதல்



பயிற்சி 7

பகுதி அ

1. நம் பெற்றோர்களின் இலட்சிய கனவு நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்  துறையில் சிறப்பாகத் திகழ வேண்டும்.


2. ஒரு பாடம் நமக்குப் புரியவில்லை என்றால் உடனே ஆசிரியரிடமிருந்து கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

3.
- நேர விரயத்தைக் குறைத்து கொள்ளலாம்.
- செய்ய வேண்டியவற்றைச் சரியான நேரத்தில் செய்து முடித்து விடலாம்.
- பயிற்சி செய்வதற்கும் மீள் பார்வை செய்வதற்கும் ஏதுவாக இரக்கும்.

4. மாணவர்கள் வகுப்பில் படிக்கும் நேரத்தைத் தவிர பிற நேரங்களில் புத்தகங்கள் படிப்பது, இணையத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றிலிருந்து பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.



பயிற்சி 8

பகுதி அ
1. i
2. iii
3. ii

4. மாணவர்களின் கட்டொழுங்கப் பிரச்சனைக்குப் பெற்றோர்களும், பொழுது போக்குச் சாதனங்களும் பெரும் பங்காற்றுகின்றன.

5.
- சமய அறிவுப் புகட்டல்
- நல்ல நெறிகளைக் கற்றுக் கொடுத்தல்
- பெற்றோரின் கண்காணிப்பு
- நல்ல நண்பர்களின் சேர்க்கை

பகுதி ஆ.

- அதிகரித்து
- கொண்டு
- பிரிவினர்
- தீர்க்கலாம்
- ஈடுபடுத்தி



பயிற்சி 9

1. iii
2. iii
3. ii
4. iv

பகுதி ஆ
- அதிகரித்து
- கொண்டு
- பிரிவினர்
- தீர்க்கலாம்
- ஈடுபடுத்து



பயிற்சி 9

பகுதி அ
1. iii
2. iii
3. ii
4. iv

பகுதி ஆ

- கொடை
- போக்குவதற்க
- மேன்மக்கள்
- புறப்பட்டார்



பயிற்சி 10

பகுதி அ

- மிகுந்த சிரத்தையுடன்
- பாரம்பரியத்தின்படி
- உறுதிமொழிகளை

பகுதி ஆ

- பிறந்த இடம் - போர் பந்தர்
- காந்தியடிகளின் மனைவியார் - கஸ்தூரி பாய்
- உயர்நிலைப் பள்ளி - இராஜ்கேட்
- பட்டம் பெறுதல் - வழக்கறிஞராக லண்டனில் பட்டம்

பகுதி இ

1.
- மது அருந்தக் கூடாது
- பிற மங்கையரை விரும்பக்வடாது
- மாமிசம் உண்ணக்வடாது.

2. காந்தியடிகள் 2.10.1869ம் நாள் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார்
- தொடக்கக்கல்வி - போர்பந்தர்
- உயர்க்கல்வி - இராஜ்கேட்
- காந்தியடிகள் - நாணமுள்ளவர, விளையாட்டில் ஆர்வமில்லாதவர், கல்வியில் மிகுந்த நாட்டமுள்ளவர்.
- திருமணம் 14 வயதில் 13 வயது நிரம்பிய கஸ்தூரிபாய் என்பவருடன் நிகழ்ந்தது.
- 18-ஆம் வயதில் சட்டக்கல்வி லண்டனில் பயின்றார்.
- 1891ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்