கல்வியில் அக்கறையில்லாமல் அலட்சியத்தோடு பள்ளிக்கு வரும் இந்திய மாணவர்களைக் கண்டு வெறுத்துப் போன எனக்கு, இன்று உண்மையிலேயே ஒரு சந்தோஷமான நாள். மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் மணிமாறன் வழங்கிய தன்முனைப்பு உரை மாணவர்களின் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அவர் உண்மையிலேயே மாணவர்களைச் சிந்திக்க வைத்தார். ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தவற்றை உணர்ந்தவர்களாய் கண்ணீர் வடித்தனர். சிலர் தேம்பித் தேம்பி அழுவதும், கதறிக் கதறி அழுவதும், தரையில் புரண்டு அழுவதும் டாக்டர் மணிமாறனின் ஆள் மனதைத் தொடும் ஆற்றலை மெய்ச்ச செய்தது. ஒவ்வொரு இடைநிலைப் பள்ளியின் தமிழ் மொழிக் கழகமும் அவரை அழைத்து இந்திய மாணவர்களுக்கு உரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், 012-2346474 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வேளையில் டாக்டர் மணிமாறனுக்கும், முன்னின்று ஏற்பாடு செய்த ஆசிரியர் பள்ளியின் நிர்வாக அதிகாரிகளுக்கும், Bimbingan & Kaunseling ஆசிரியர்களுக்கும் திரு. கணேசனுக்கும், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கிய திரு. முகிலனுக்கும் எனது நன்றிகள்.
No comments:
Post a Comment