இந்த ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்யய இங்கே சொடுக்கவும்,
வணக்கம். ரவாங் இடைநிலைப் பள்ளியின் தமிழ் மொழிக் கழகம் மேற்கண்ட விழாவை வரும் 30.07.2010 (வெள்ளி) நண்பகல் 12.00 மணிக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பல ஆயத்தங்களை நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பகல் 12.20 மணி முதல் ஏற்பாடு செய்யவுள்ளோம். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
2. இப்பள்ளியின் ஒவ்வொரு இந்திய மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் முன்னதாகவே, பின்வரும் பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடனம், நாடகம், நகைச்சுவை போன்ற எந்த நிகழ்ச்சியையும் படைக்கலாம். அதற்கு ஆயத்தமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்திப்பின் போது பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இதற்குத் தேவைப்படும் ஆடை ஆபரணங்களை மாணவர்களே தங்கள் சொந்த செலவில் கொண்டு வரவேண்டும்.
3. பயிற்சியின் போது கட்டொழுங்கு பேணப்பட வேண்டும். கலந்து கொள்கின்ற மாணவர்கள் பயிற்சி நேரத்தில் ஆசிரியரின் பார்வையிலேயே இருக்க வேண்டும். பள்ளி உடைமைகள் எதையும் சேதப்படுத்தக் கூடாது. கூச்சலிடுதல், விசிலடித்தல், தாளம் போடுதல், கிண்டலடித்தல் போன்ற காரியங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது. கலைத்திறன் அங்கங்களில் பங்குபெறாத மாணவர்கள் பயிற்சி நடைபெறும் இடத்தில் கூடக் கூடாது.
3. மாணவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் தவறான நடவடிக்கை குறித்து புகார் எழுப்பினால், இந்த நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்படும். எனவே, தமிழ் மொழிக் கழகப் பொறுப்பாசிரியர்களுக்கு எந்தக் கலங்கமும் ஏற்படாத படி கட்டொழுங்கோடு நடந்து கொள்வது மாணவர்களின் அதி முக்கிய கடமையாகும்.
4. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால், பள்ளி நிர்வாகத்திடம் இன்னும் அனுமதி கேட்கப்படவில்லை என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கலைத்திறன் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் விபரம்
No comments:
Post a Comment