Monday, July 26, 2010

எனது கடந்த கால எண்ண அலைகள்

இங்கே சொடுக்கு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


(மாணவர் கடந்த கால அனுபவங்கள் மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கையையும் கற்பனையாக எழுதி ஒரு சிறப்பான படைப்பைத் தந்திருக்கிறார் - ஆசிரியர்)



பேராவின் தலைநகரமான ஈப்போவில்தான் நான் பிறந்தேன். நான் ஒரு நடுத்தர தமிழ்க் குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை கா.சிவக்குமார் பெரிய பணக்காரர் அல்லர். அவர் ஒரு லோரி ஓட்டுனராக பணி புரிந்தார். அதிகம் படித்தவரும் கிடையாது. இருந்தாலும் ஆழ்ந்த யோசனை கொண்டவர். என் தாயார் ஆ.லட்சமி தந்தையின் மனத்திற்கேற்ற மனைவி. எளியோருக்கு மனம் கோணாமல் உதவி செய்வார். என் தாய், தந்தை மிகவும் அன்பானவர்கள். நானோ அவர்களுக்குப் பிறந்த மூத்தப் புதல்வி.



நான் 20.10.1996ல் பிறந்தேன். நான் பிற்காலத்தில் குடும்பத்தாரோடு ரவாங் பட்டணத்திற்குக் குடி பெயர்ந்தேன். குடும்பத்தின் முதல் புதல்வி என்ற முறையில் எனக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. எனக்கு இரண்டு தங்கைமார்களும் ஒரு தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரண அக்காளாக இருந்தேன்.



என் குழந்தைப் பருவத்தில் நான் நிறைய சுட்டித்தனம் செய்துள்ளேன். எனது 5 வயதில் நான் முதன் முதலாக பாலர்ப்பள்ளிக்குச் சென்றேன். என் இளவயதில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் தேன்மொழி, விநிதா, தினேஸ்வரி, டர்ஷனி, அமலா, லோகோஸ்வரி, இளமதி மற்றும் இன்னும் சிலர் பிறகு, நான் ரவாங் ஆரம்பப்பள்ளியில் பயின்று வந்தேன். அந்தப் பள்ளியில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. பல அருமையான நற்குணம் கொண்ட ஆசிரியர்களும் கிடைத்தனர்.



பின்பு நான் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றேன். அங்குச் சென்றவுடன் பல தீயகுண நண்பர்களுடன் சேர்ந்து என் எண்ணங்கள் மாறின. அப்போது என் தமிழ்மொழி ஆசிரியர் எனக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவர் கூறியதை நான் பின்பற்றினேன். பிறகு எனக்கு மொழி பாடங்களில் பல சிக்கல் இருந்தன. என் ஆசிரியர் கூறியபடி நான் நாளிதழ்களையும் நூல் நிலையத்திலிருந்து மொழி சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இரவல் வாங்கி படித்தேன். பிறகு நான் மொழிப் பாடங்களில் உயர்ந்த புள்ளிகள் எடுத்தேன். ஆரம்பப் பள்ளியில் எனக்கு 7ஏ கிடைக்காததே என் வாழ்வின் பெரிய ஏமாற்றமாக இருத்தது. எனக்கு யுபிஎஸ்ஆர் சோதனையில் 2ஏ, 4பி, 1சி மட்டும் கிடைத்தது.



எனக்குக் கிட்டிய வாய்ப்பு என்றால் என் பிஎம்ஆர் தேர்ச்சிதான். என் பிஎம்ஆர் தேர்வில் 7ஏ,1பி பெற்று, என் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்து தந்தேன். பிறகு நான் என் கல்விக்காக பல போராட்டங்களைத் தாண்டி உயர்கல்வியை மேற்கொண்டேன். எனது எல்லா ஆசைகளும் நிறைவேறின. பிறகு நான் மலாயாப் பல்கலைக் கழகத்தின் கல்வியின் முதல் வகுப்பு வெற்றியடைந்தேன். இதனால் என் பெற்றோர்கள் உச்சிக்குளிர்ந்தனர்.



இன்று, நான் ஒரு விமானியாகப் பணி புரிகிறேன். சிறு வயது முதற்கொண்டு நான் இத்தொழிலைத்தான் இலட்சியமாகக் கொண்டேன். நாட்டின் தேசிய விமானச் சேவையில் ஒரு பெண் விமானியாகப் பணி புரியும் ஒரு இந்தியப் பெண் நான்தான். ஏற்ற காலத்தில் என் பெற்றோர் எனக்குத் திருதமணம் செய்து வைத்தனர். என் கணவரோ முயற்சியுடையவர். அன்பானவர், நற்குணம் கொண்டவர். புத்திசாலியும்கூட. இதனால் அவர் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றிக் கனிகளைத் தேடித் தந்தது. அவருடன் சேர்ந்து நடத்தும் குடும்ப வாழ்க்கையில் எனக்கும் பல இனிய புதிய அனுபவங்கள் கிடைத்தன.



எங்கள் வாழ்நாளில் நாங்கள் நிகழ்த்திய சாதனைகள் என்றால் எங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்ததுதான். அவர்களும் பல சாதனைகள் செய்தனர். என் பிள்ளைகள் உதவி மனப்பான்மை கொண்டவர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கைச் சக்கரத்திலேயே நான் ஒரு விமானியாகப் பணி புரிந்தேன்.



எனது எல்லா சாதனைக்கும் காரணம் என் தமிழ் மொழி ஆசிரியர் திருமதி விஜயா மற்றும் குமாரி ராதா. நான் இப்பொழுதும் என் ஆசிரியர்களுக்கு நிறைய கடமைப்பட்டுள்ளேன். ஏன் என்றால், அவர் மட்டும் என் இடைநிலைப் பள்ளியில் எனக்கு அறிவுரை கூறி என்னை நல்வழியில் கொண்டு சொல்லவில்லை என்றால் நான் பல தீய நண்பர்களுடன் சேர்ந்து பல தீயப் பழக்கங்களில் ஈடுபட்டிருப்பேன். இப்போது என் பிள்ளைகளும் நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள். நான் இப்பொழுது என் ஆசிரியரை மதிக்கின்றேன். எனது எல்லா சாதனையைக் கண்ட என் பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.



சி.ல.தனலட்சமி

Tuesday, July 6, 2010

தமிழ் மொழி விழா

இந்த ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்யய இங்கே சொடுக்கவும்,

வணக்கம். ரவாங் இடைநிலைப் பள்ளியின் தமிழ் மொழிக் கழகம் மேற்கண்ட விழாவை வரும் 30.07.2010 (வெள்ளி) நண்பகல் 12.00 மணிக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பல ஆயத்தங்களை நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பகல் 12.20 மணி முதல் ஏற்பாடு செய்யவுள்ளோம். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.



2. இப்பள்ளியின் ஒவ்வொரு இந்திய மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் முன்னதாகவே, பின்வரும் பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடனம், நாடகம், நகைச்சுவை போன்ற எந்த நிகழ்ச்சியையும் படைக்கலாம். அதற்கு ஆயத்தமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்திப்பின் போது பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இதற்குத் தேவைப்படும் ஆடை ஆபரணங்களை மாணவர்களே தங்கள் சொந்த செலவில் கொண்டு வரவேண்டும்.



3. பயிற்சியின் போது கட்டொழுங்கு பேணப்பட வேண்டும். கலந்து கொள்கின்ற மாணவர்கள் பயிற்சி நேரத்தில் ஆசிரியரின் பார்வையிலேயே இருக்க வேண்டும். பள்ளி உடைமைகள் எதையும் சேதப்படுத்தக் கூடாது. கூச்சலிடுதல், விசிலடித்தல், தாளம் போடுதல், கிண்டலடித்தல் போன்ற காரியங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது. கலைத்திறன் அங்கங்களில் பங்குபெறாத மாணவர்கள் பயிற்சி நடைபெறும் இடத்தில் கூடக் கூடாது.



3. மாணவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் தவறான நடவடிக்கை குறித்து புகார் எழுப்பினால், இந்த நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்படும். எனவே, தமிழ் மொழிக் கழகப் பொறுப்பாசிரியர்களுக்கு எந்தக் கலங்கமும் ஏற்படாத படி கட்டொழுங்கோடு நடந்து கொள்வது மாணவர்களின் அதி முக்கிய கடமையாகும்.



4. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால், பள்ளி நிர்வாகத்திடம் இன்னும் அனுமதி கேட்கப்படவில்லை என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கலைத்திறன் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் விபரம்