Thursday, May 5, 2011

சொந்தம் (கவிதை)

அன்னைக்குக் குழந்தை சொந்தம்
அன்புக்குப் பாசம் சொந்தம்
ஆணுக்குப் பேராண்மை சொந்தம்
அவனுக்குப் பெண்ணும் சொந்தம்
இளமைக்குப் புதுமை சொந்தம்
இரவுக்குப் பகல் சொந்தம்
உண்மைக்குப் பொய் சொந்தம்
உடலுக்கு உயிர் சொந்தம்
எண்ணத்துக்குக் கவனம் சொந்தம்
ஏழ்மைக்கு உறுதி சொந்தம்
ஓடத்துக்குத் துடுப்புச் சொந்தம்
ஔவைக்கு ஆத்திச்சூடி சொந்தம்
கடலுக்கு அலை சொந்தம்
கண்ணுக்கு இளமை சொந்தம்
கனவுக்கு  நினைவு சொந்தம்

ஆனால்,
எனக்கோ என்ன சொந்தம்?
இந்த ‘ஸ்மார்ட்’ சொந்தம்

ஆக்கம்
பவித்திரா கலைச்செல்வன்
2 டாலியா