Wednesday, November 17, 2010

இரத்தத்தை தானம் செய்வதால் விளையும் நன்மைகள்

மனித இரத்தத்திற்கு மாற்றீடு கிடையாது. ஆனாலும் ஆய்வாளர்கள் காலாகாலமாக செயற்கையான மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒரு மனிதனுடைய இரத்தமே இன்னொருவரின் உயிரைக் காக்க முடியும்.
மனித இரத்தம் பல பகுதிகளைக் கொண்டுள்ளது. அதனை நான்கு பெரிய குழுக்களாகப் பிரிக்கலாம்: A, B, AB, மற்றும் O. O வகை இரத்தம் பரவலாகக் காணப்படுகிறது. அவசர காலக் கட்டத்தில் இதற்குப் பற்றாக் குறை ஏற்படும். ஒருவர் உடலில் ஓடும் அதே இரத்த வகையைத்தான் இன்னொருவருக்கு மாற்ற முடியும்.  தவறான இரத்த வகையைச் செலுத்தும் போது ஒருவரின் உடல் பிறபொருளெதிரிகளை (antibodies) உற்பத்தி செய்யும்.
இரத்த தானம் பலருக்குப் பயனுள்ளதாகத் திகழ்கிறது. ஓர் இரத்த அளவு பின்வரும் வகையில் உதவுகிறது:

• தானம் செய்யப்படும் ஓர் இரத்த அளவு மூவருக்கு உதவியாக இருக்கிறது.
• இரத்தத் துளிகளில் வெள்ளை அணு (பிளாஸ்மா), சிவப்பு அணு என்று பல கூறுகள் அடங்கியுள்ளன. கூறுகள் அடிப்படையில் இந்த இரத்தத் துளிகள் எழுவருக்கு உதவியாக அமையும்
• அறுவை சிகிச்சை மேற்கொள்வோருக்கு தானம் செய்யப்படும் இரத்தம் பயனுள்ளதாக அமைகியது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவருக்கு அதிகபட்சம் பத்து பை இரத்த அளவு தேவைப்படலாம். பலவிதமான அறுவை சிகிச்சைகளுக்கும், விபத்தில் பலியாகிறவர்களுக்கும் இரத்த மாற்றீடு தேவைப்படுகிறது.
• மருந்து அருந்தி நோய் தீர்ப்பவர்களும் கதிரலை சிகிச்சை பெறுவோரும் தானம் செய்யப்படும் இரத்தத்தால் பயனடைகிறார்கள்.
• சிக்கில் செல் அனீமியா நோயாளிகளுக்கு, தங்கள் சிவப்பு அணுக்களை மாற்றிக் கொள்ள இரத்தம் தானம் செய்யப்பட வேண்டியுள்ளது.
• குன்றிய வளர்ச்சியுடைய சிசுக்களுக்கும் பிள்ளைகளுக்கும் தானம் செய்யப்படும் இரத்தம் உயிர் காக்கிறது. இந்தச் சின்னஞ் சிறு நோயாளிகளுக்கு இரத்த மாற்றீடு தேவைப்படுகிறது. ஒரு கொடையாளரின் இரத்தமே இவர்களுக்கு உதவுகிறது.

கொடையாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்

இரத்தத்தைப் பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல், அதனை வழங்குகிறவர்களும் தங்கள் ஆரோக்கிய நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம். இரத்த கொடையாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஆரோக்கிய நலன்கள் யாவை?
உயிர் காக்கும் இரத்த தானம், அதனைப் பெறுபவர்களுக்கும் அப்பால் நன்மையை அருளுகிறது. கொடையாளர்கள் எண்ணற்ற ஆரோக்கிய ஆதாயங்களைப் பெறுகிறார்கள். பின்வருபவை அவற்றுள் அடங்கும்:


இலவச ஆரோக்கிய மதிப்பாய்வு:
இரத்தம் வழங்கும் ஒவ்வொரு முறையும், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர், தாதியர் உங்கள் இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பார்ப்பதோடு, இலவச ஆரோக்கிய மதிப்பாய்வையும் செய்கிறார்.

இரத்தம் வழங்குவது உங்கள் உயிரையும் காக்கும்
இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: பல மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இரத்தம் வழங்குவது இருதய நோய்களைக் குறைக்கும் என்று நம்புகின்றனர். தீர்க்கமான ஆதாரங்கள் இல்லையென்றாலும், தானம் செய்யாதவர்களை விட தானம் செய்பவர்களுக்கு குறைந்த அளவிலேயே இருதய நோய் ஏற்படும் என்று கவனித்துள்ளனர். டாக்டர் ஹெர்வி கிளைன், இன்றைய அமெரிக்கா என்ற சஞ்சிகையின் கட்டுரையில், தானம் செய்வதன் மூலம், இரத்த சுழற்சியில் உள்ள இருப்புச் சத்து குறைகிறது என்று ஆலோசனை கூறியுள்ளார். இருப்புச் சத்து மனித வாழ்வுக்கு முக்கியமான கூறு என்றாலும், அளவுக்கதிகமான இருப்புச் சத்து இருதயத்தையும் இரத்த ஓட்ட முறைமையையும் பாழாக்கக் கூடும். டாக்டர் கிளைனும் பிறரும், இரத்த தானம் மூலம் இருப்புச் சத்தை குறைக்கச் செய்வது, இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு ஓர் ஆரோக்கியமான முறை என்று நம்புகின்றனர்.
இதோ காரணம்! ஆக்கிகரணத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தக் குழல் தமனியின் சேதமடைதலையும் குறைக்கிறது
இரத்தம் வழங்கும் ஒவ்வொரு முறையும், அதிலுள்ள இருப்புச் சத்தை நீங்கள் அகற்றுகிறீர்கள். இரத்தத்தில் உள்ள அதிகமான இருப்புச் சத்து, இருதய நோய்களை ஏற்படுத்த வல்லது. இருப்புச் சத்து, கொழுப்புச் சத்தின் ஆக்கிகரணத்தை துரிதப்படுத்துகிறது. இந்தச் செயல்பாங்கு இரத்தக் குழல் தமனியைத் துரிதமாக சேதமடையச் செய்வதோடு,  இருதயக் குழலிய நோய்களுக்கும் வழி வகுக்கிறது.
பெண்களை விட ஆண்களுக்கு ஏன் வெகு விரைவில் இதய நோய்கள் உண்டாகின்றன என்று இரத்தத்தில் உள்ள இருப்புச் சத்தின் அளவை சலிவன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். மாத விடாய் காலங்களில் பெண்கள் உதிரப் போக்கின் மூலம் இருப்புச் சத்தையும் வெளியாக்குகிறார்கள். ஆண்களோ, தங்கள் இருபதாவது வயதில், இருப்புச் சத்தைத் தங்கள் உரிகளில் சேமிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வயதுக்குப் பிறகுதான் அவர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய் அபாயங்களும் தொடங்குகிறது.
பொதுவாக சராசரி மூத்த ஆண்களின் உடலில் 1,000 மில்லிகிராம் இருப்புச் சத்துகளும் பெண்களின் உடலில் 300 மில்லிகிராம் இருப்புச் சத்துகளும் சேமித்து வைக்கப் படுகின்றன என்று விக்டர் ஹெர்பெர்ட் கருதுகிறார். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தைத் தாண்டும்போது, ஆண்களுக்கு நிகராக இதய நோய் அபாயத்தைச் சந்திக்கிறார்கள்.
புற்று நோய், இருதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது
அளவுக்கதிகமான இருப்புச் சத்தை உட்கொள்வதால், உடலில் தேவையில்லாத களிவுப்பொருள்கள் உருவாக்குகிறது. இக்கழிவுப் பொருள்கள், உயிர்மங்களின் இயல்பான இயக்கத்தைச் சீரழித்து, நீடித்த உபாதையைத் தரும் இருதய மற்றும் புற்று நோய்களை விளைவிக்கிறது. ஆண்களுக்கும் மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கும் இந்த நோய்களின் அபாயம் அதிகம் உண்டாகிறது. (மகப் பேறு உடைய பெண்களுக்கு உடலில் குவிகின்ற இருப்புச் சத்து மாத விடாய் மூலம் கழிந்து விடுவதால் இந்த அபாயம் குறைவாகக் காணப்படுகிறது.) சமையாத மாம்சத்தை உண்ணும் மனிதர்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.
இருப்புச் சத்து மிஞ்சிப் போகாமல் இருக்க இரத்ததானம் எவ்வாறு உதவுகிறது?
உடலில் மிஞ்சிய இருப்புச் சத்து மூலம் தேவையில்லாமல் உருவாகிற கழிவுப் பொருள்களை இரத்த தானம் அப்புறப் படுத்துகிறது. உண்மையில், அடிக்கடி இரத்த தானம் செய்யும் ஆண்களுக்கு இருதய நோய் ஏற்படும் அபாயம் குறைந்து காணப்படுகிறது. ஆண்கள் மரித்துப் போவதற்கு முதன்மையான காரணமாக இருதய நோய் திகழும் பட்சத்தில் அவர்கள் இரத்த தானம் செய்வது ஓர் அவசியமான தேவையாயிருக்கிறது.
அளவுக்கு அதிகமான இருப்புச் சத்தை நீங்கள் வழங்கவில்லை என்பதை எப்படி உறுதி செய்து கொள்ள முடியும்?
நீங்கள் இரத்த தானம்  செய்யுமுன், உங்கள் இருப்புச் சத்தைக் கொண்டுள்ள சிவப்பணுக்களின் அளவு குத்துமதிப்பாக சோதித்துப் பார்க்கப்படும். அது மிகக் குறைவாகக் காணப்பட்டால், தானம் செய்ய அணுமதிக்கப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு முறையும் தானம் செய்ய வரும்போது உங்கள் சிவப்பணு அளவு அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். அதிகமான இருப்புச் சத்தை உங்கள் உடல் இழந்து விடாதபடிக்கு, எட்டு வாரத்திற்கு ஒரு முறைதான் தானம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். இது, உங்கள் இருப்புச் சத்தின் அளவைக் கண்கானித்துக் கொள்ள ஒரு இலவசமான மற்றும் எளிய வழியாகும்.
இன்று, இரத்தம் தொடர்புடைய எல்லா வியாதிகளையும் கண்டறிய உங்கள் இரத்தம் மிக அணுக்கமான பரிசோதிக்கப்படுகிறது.
உங்கள் மனித நேயச் செயல் உங்களுக்கே மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்!
தானம் செய்வது உங்களுக்குப் பெருமை உணர்வைத் தேடித் தரும். சிறப்பாக அதற்காக நீங்கள் ஒதுக்கும் ஒரு மணி நேரமும், ஒரு சொட்டும் பலருடைய உயிரைக் காக்கப் போகிறது என்பதை உணரும்போது அந்தப் பெருமை பல மடங்காகும். மிகவும் தேவைப்படும் ஒருவருக்கு மிக அத்தியாவசியமான ஒன்றை வழங்குவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியடைவதை விட, உங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பேணவும் செய்கிறீர்கள்.
இறுதியாக, இரத்த தானம் செய்வதில் ஞானமும் பச்சதாபமும் உண்டு

இரத்த தானத்தில் எல்லாவிதமான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதால், கொடையாளருக்கு எந்தவித ஆரோக்கியக் கெடுதலும் இல்லை என்று தின்னமாக்க் கூறலாம்.

நமது இந்திய மாணவர்களின் அவலட்சணங்கள்

குமலேசனும் கலையரசனும் பாடத்திற்கு மட்டம் போட்டு விட்டு, புளோக் ஜி-யில் அங்கும் இங்கும் நடமாடுகிறார்கள். தங்கள் கண்ணில் படுகிற இந்திய மாணவர்களைக் கெட்ட வார்தையில் திட்டுகிறார்கள்.



தமிழ்த் தலைவர்கள்









































Tuesday, October 19, 2010

Untuk Majalah Sekolah

இவ்வாண்டுக்கான பள்ளி இதழில் இடம்பெறப் போகும் தமிழ் படைப்புகளை இங்கே பெற்றுக் கொள்ளலாம்....

Muat Turun di Sini



http://www.ziddu.com/download/12152443/Majalah2010.pdf.html

http://www.ziddu.com/download/12152444/.html

Saturday, August 21, 2010

சமய ரீதியான தன்முனைப்புக் கருத்தரங்கு



 
இன்று தமிழ் மொழிக் கழகம் நடத்திய சமய ரீதியான தன்முனைப்புக் கருத்தரங்கின் படங்களை இங்கே காணலாம்.

அறிக்கைகள் அனுப்பப்பட்ட பின்னரும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்ட பின்னும் பல மாணவர்கள் இது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று சொன்னது வேடிக்கை நிறைந்த வேதனையான விஷயம்.

என்னதெல்லாமோ உதவாக்கறையான ஊர்க்கதைகளை பேசத் தெரிந்த இந்த மாணவர்களுக்கு அவர்களுடைய வளர்ச்சி பற்றிய காரியங்களைப் பேசத் தெரியாமல் போனது ஒரு மிகப் பெரிய அவமானம்.

இந்த அறிக்கை விநியோகிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் பள்ளி பண்டசாலையில் குப்பைகளாகக் கிடந்தன. அந்த அளவுக்கு நம்முடைய மாணவர்களுக்கு அக்கறை.

இறைவன்தான் இவர்களைக் காப்பபாற்ற வேண்டும்.